Aoz - Maps Züri Agenda

M
A
P
S
Züri
Agenda

Günstige Kultur- und Freizeitangebote

8 நவம்பர் – 20 நவம்பர்

சனிக்கிழமை

8.11

மதங்களின் வாரம் (16.11. வரை)

Woche der Religionen நிகழ்ச்சியின் போது, நீங்கள் சூரிச்சில் உள்ள பல்வேறு மத சமூகங்களைப் பற்றிய அறிவை விரிவுபடுத்தலாம். 08.11. முதல் 16.11. வரை நகரின் பல இடங்களில் நடைபெறும் உரைகள், கலந்துரையாடல்கள், இசைநிகழ்வுகள் மற்றும் வாசிப்பு நிகழ்வுகளில் நீங்கள் பங்கேருங்கள். முழு நிகழ்ச்சி அட்டவணையை இணையத் தளத்தில் காணலாம். சில நிகழ்வுகளுக்கு முன்பதிவு அவசியம். இலவசம்.

www.forum-der-religionen.ch

சனிக்கிழமை

8.11

அபாயத்திலுள்ள ஒரு தீவைப் பற்றிய ஆவணப்படம்

Oceania – Journey to the Center என்ற திரைப்படம், உயர்ந்து வரும்-கடல் மட்டம் பசிபிக் பெருங்கடலில் உள்ள Kiribati தீவின் வாழ்வை எவ்வாறு அச்சுறுத்துகிறது என்பதை காட்டுகிறது. அங்குள்ள மக்கள் தங்கள் நிலத்துடனும் கலாச்சாரத்துடனும் ஆழமாக இணைந்துள்ளனர். அவர்களில் சிலர் கடினமான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர்: அங்கு தங்கலாமா அல்லது தாங்கள் அறிந்ததையெல்லாம் விட்டுவிட்டு வேறேங்காவது போகவேண்டுமா? மொழி: ஆங்கிலம். நேரம்: 11:00. MAPS-அலுவலகம் 4×2 இலவச அனுமதிகளை வழங்குகிறது. தொலைபேசியில் தொடர்புகொள்ள: 044 415 65 89 அல்லது உங்கள் அஞ்சல் முகவரியை maps@aoz.ch இற்கு மின்னஞ்சல் செய்யவும்.

Karl der Grosse. Kirchgasse 14.

Tram 4/15 bis "Helmhaus".

www.karldergrosse.ch

ஞாயிற்றுக்கிழமை

9.11

விளையாட்டு வகைகளை அறிதல்

M-Nüün நிகழ்வில் இன்று 12 வயதுக்கு மேற்பட்ட இளையோரர்கள் பல்வேறு விளையாட்டு வகைகளை முயற்சி செய்து பார்க்கலாம். Slackline மீது சமநிலை பேணுதல், Parkour மூலம் தடைகளை திறமையாக கடப்பது, ஏறுதல் மற்றும் பல சுவாரஸ்யமான செயல்கள் உங்களுக்கு காத்திருக்கின்றன. அறிமுக அமர்வுகள் முறையே 10:15, 11:15 மற்றும் 12:15 இற்கு ஆரம்பமாகும். விளையாட்டு-உடை மற்றும் உட்புற அரங்குக்கான காலணிகளை கொண்டு வரவும். குளிர் கால அரையாண்டில் ஒவ்வொரு ஞாயிறும் நடைபெறும். முன்பதிவு தேவையில்லை. பங்கேற்பு இலவசம்.

Messehalle 9. Thurgauerstr. 11.

Tram 11 oder Bus 61/62 bis "Messe/Hallenstadion".

www.stadt-zuerich.ch

செவ்வாய்க்கிழமை

11.11

எல்லோருக்கும் கலை

சூரிச்சின் Kunsthaus Zürich எனும் கலை இல்லத்தின் நுழைவுக்-கூடத்திலும் Garten der Kunst எனும் பகுதியில் நீங்கள் நவீனக் கலைப்பணிகளை காணலாம். தற்போது அங்கு கலைஞர் Jeffrey Gibson மற்றும் கலைஞர் Monster Chetwynd ஆகியோரின் படைப்புகளும் உள்ளன. பெரிய முகப்புப்-படம் we will continue to change யைப் பாருங்கள் அல்லது Zardoz எனும் சிற்பத்திற்குள் நுழைந்தும் அனுபவிக்கலாம். இந்தக் கலைப்பணிகள் 2026 ஆம் ஆண்டு இறுதி வரை சூரிச்சில் காணக்கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலைத் தோட்டம் திறப்பு நேரம்: தினசரி 06:00-21:30. நுழைவு-மண்டபம் திறப்பு: செவ்-ஞாயி 10:00-18:00. அனுமதி இலவசம்.

Kunsthaus Zürich, Eingangshalle und Garten der Kunst. Heimplatz 1/5.

Tram 3/5/8/9 oder Bus 31 bis "Kunsthaus".

www.kunsthaus.ch

புதன்கிழமை

12.11

சிறுவர்களுக்கான வாசிப்பு

இன்றைய Bücherkiste நிகழ்வில், ஒரு நிகழ்ச்சியாளர் சிறுவர்-புத்தகத்தை வாசிப்பார். Wenn du träumst என்ற இந்தப் புத்தகம் சாகசமான யோசனைகளை கூறுகின்றது. டிராம்போலைனிலிருந்து விண்வெளியில் குதிப்பதா? பிரச்சனை இல்லை, ஏனென்றால் கனவுகளில் சாத்தியமற்றது சாத்தியமாகிவிடும். 4 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு. நேரம்: 15:00-15:45. இலவச நுழைவு, சேகரிப்பு.

PBZ Sihlcity. Kalanderplatz 5.

Tram 5/13/17 oder Bus 72 bis "Sihlcity Nord". Bus 98/200/210 bis "Sihlcity".

www.pbz.ch

வியாழக்கிழமை

13.11

பிரேசிலில் இருந்து படம்

The Secret Agent திரைப்படம் 1977 ஆம் ஆண்டு பிரேசிலில் இடம்பெற்றுள்ளது. மார்செலோ தனது மகனை ரெசிஃப் நகரில் கார்னிவலின் போது சந்திக்கிறார். ஆனால் அவர் கவனமாக இருக்க வேண்டும்: ஒரு ஆபத்தான ரகசியத்தை அவர் அறிந்திருப்பதால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்த கடினமான நேரத்தில் அவருக்கு உதவும் மக்களை அவர் சந்திக்கிறார். MAPS-அலுவலகம் 3×2 இலவச அனுமதிகளை வழங்குகிறது. தொலைபேசியில் தொடர்புகொள்ள: 044 415 65 89 அல்லது உங்கள் அஞ்சல் முகவரியை maps@aoz.ch இற்கு மின்னஞ்சல் செய்யவும். உங்கள் வருகையின் திகதியை திநீங்கள் தேர்வு செய்யலாம்.

www.trigon-film.org

வெள்ளிக்கிழமை

14.11

படைப்பாற்றலுடன் அஞ்சல்- அட்டைகள் (16.11. வரை)

வதிவிடத்திலுள்ள மக்கள் தங்கள் கலைப்பணிகளை Altstadthaus இல் வார இறுதியில் காட்சிப்படுத்துகின்றனர். Grosse Ausstellung im kleinen Format! என்ற தலைப்பில், அவர்கள் சிறிய அஞ்சல் அட்டைகளில் வரைந்து, ஓவியமிட்டு, ஒட்டி வடிவமைத்துள்ளனர். திறப்பு: வெள் 14.11. முதல் 18:00. கண்காட்சி நாட்கள்: சனி 15.11. மற்றும் ஞாயி 16.11. முதல் 11:00-17:00. அனுமதி இலவசம்.

Altstadthaus. Obmannamtsgasse 15.

Tram 3 oder Bus 31 bis "Neumarkt".

www.altstadthaus.ch/programm

சனிக்கிழமை

15.11

நடனம் மற்றும் இசையுடன் கூடிய நாடகம்

Woche der Religionen நிகழ்வுத் தொடரின் ஒரு பகுதியாக, இன்று 20 இற்கும் மேற்பட்ட நடிகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் Mahabharata நாடகத்தை நிகழ்த்துவார்கள். Mahabharata என்பது இந்தியாவின் ஒரு பழமையான மற்றும் நன்கு அறியப்பட்ட கதை. இது நட்பு, துரோகம், மன்னிப்பு மற்றும் ஞானத்தைப் பற்றி சொல்கிறது. முன்பதிவு பதிவு தேவையில்லை. நேரம்: 18:00-21:30. அனுமதி இலவசம்.

Predigerkirche. Zähringerplatz 6.

Tram 4/15 bis "Rudolf-Brun-Brücke".

www.forum-der-religionen.ch

ஞாயிற்றுக்கிழமை

16.11

கோடைக்கும் குளிர்காலத்திற்கும் இடையிலான இசை நிகழ்ச்சி

Stadtharmonie Zürich Oerlikon-Seebach இசைக்குழு இன்று உங்களை Interludium இசை நிகழ்ச்சிக்கு அழைக்கிறது. இசைக்கலைஞர்கள் தங்கள் காற்று இசைக்கருவிகளுடன் பல்வேறு நிகழ்ச்சிகளை நிகழ்த்துவார்கள். நேரம்: 17:00. இலவச நுழைவு, சேகரிப்பு.

Kirche "Auf der Egg". Auf der Egg 11.

Tram 7 oder Bus 66/70/72 bis "Morgental".

www.stadtharmonie.ch

செவ்வாய்க்கிழமை

18.11

அனைவருக்கும் குரல் பயிற்சி

Opernhaus Zürich இன் open space stimme திட்டம் தொடக்கநிலையாளர்களும் மேம்பட்ட பாடகர்களும் ஒன்றாகப் பாட அனுமதிக்கிறது. உங்கள் சொந்தக் குரலைக் கண்டறியவும், அதைப் பரிசோதிக்கவும், உங்கள் நடிப்புத் திறனை வளர்த்துக் கொள்ளவும் விரும்புகிறீர்களா? பிறகு வாருங்கள். 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள். கோடை விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறை நாட்கள் தவிர, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும். 19:00–21:00. பங்கேற்பு இலவசம்.

Probebühne Kreuzstrasse, Untergeschoss (UG). Kreuzstr. 5.

Tram 2/4 oder Bus 912/916 bis "Kreuzstrasse".

www.opernhaus.ch

புதன்கிழமை

19.11

சூரிச்சில் உள்ள பள்ளி அமைப்பு பற்றிய ஆன்லைன் தகவல் நிகழ்வு

சூரிச் நகரத்தில் உள்ள பள்ளிகள் குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? இன்று, Schulbotschafter திட்டத்தின் மூலம் பல்வேறு மொழிகளில் அவர்களிடம் கேட்கலாம். இணையதளத்தில் பதிவு செய்யவும். நிகழ்வு ஆன்லைனில் நடைபெறும். மொழிகள்: ஜெர்மன், ஆங்கிலம், டிக்ரின்யா, துருக்கியம் மற்றும் உக்ரைனியன். 25.11. அன்று, ஃபார்சி/டாரி, போர்த்துகீசியம், சோமாலி மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில். 27.11. அன்று, பெங்காலி, அரபு, பிரஞ்சு, இத்தாலியன் மற்றும் அல்பேனியன் மொழிகளில். 19:00–21:00. இலவசம்.

www.stadt-zuerich.ch/de/bildung

புதன்கிழமை

19.11

Gemeinsam Stricken

Hast du Lust, das Stricken auszuprobieren? Beim Anlass “Strick Kafi“ beim “Quartierzentrum Schütze“ zeigen dir Expertinnen, wie du Pulswärmer stricken kannst – ganz locker und mit viel Geduld. Keine Vorkenntnisse notwendig. Anmeldung per E-Mail an quartierarbeit4u5@zuerich.ch. Mitbringen: eigene Stricknadeln und Lieblingsgarn, Garnreste sind vorhanden. Zeit: 17:30-20:00. Kosten: CHF 5.-.

Quartierzentrum Schütze. Heinrichstr. 238.

Tram 4/8/13/17 und Bus 33/72/83 bis „Escher-Wyss-Platz“.

www.stadt-zuerich.ch/aktuell

வியாழக்கிழமை

20.11

Bahnhofstrasse மீது நட்சத்திரங்கள் நிறைந்த வானம்

இன்று, இந்த ஆண்டு முதல் முறையாக சூரிச்சில் Lucy கிறிஸ்துமஸ் விளக்குகள் ஒளிர உள்ளன. அவை Bahnhofstrasse க்கு பண்டிகை ஒளியைக் கொண்டு வந்து ஒரு மாயாஜால சூழ்நிலையை உருவாக்கும். அங்கே இருங்கள்! நேரம்: 18:00. இலவசம்.

Bahnhofstrasse.

Tram 6/7/11/13/17 bis "Bahnhofstrasse/HB".

www.bahnhofstrasse-zuerich.ch/lucy

திங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனிஞாயிறு