மாப்ஸ் (MAPS) சூரிச்நாட்காட்டியின் தகவல்வழங்கலும் ஒருங்கிணைப்பும்.
பல மொழிகளிலான நிகழ்ச்சித் தகவல்கள்.
மாப்ஸ் சூரிச் நாட்காட்டி சூரிச் நகரில் நடைபெறுகின்ற மலிவான மற்றும் பல்வேறு கலாச்சார, ஓய்வு நேர நிகழ்வுகளின்மாதாந்த தகவல்களை வழங்குகின்றது. இவ் நாட்காட்டி பின்வருகின்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவருகின்றது: அல்பானிஷ்,அரபு, பொஸ்னிஸ்/செர்பிஷ்/குரோவதீஸ், ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலி, பெர்சிஷ், போர்துக்கல், ருசீஸ், ஸ்பானியா, தமிழ் மற்றும் துருக்கி. 2015 ஆண்டிலிருந்து மண்டரின், சோமாலி, திக்ரின்யா ஆகிய மொழிகளிலும் வெளிவரவுள்ளது.
யார் தகவல்களை பெற்று உள்ளார்களோ, அவர்கள் இணைந்து கொள்ளலாம்.
இவ்வெளியீடு புலம்பெயர்ந்து, தாழ்ந்த வருமானத்தைப் பெற்று வாழுகின்ற வேற்று மொழி பேசுகின்ற மக்களை இலக்காக கொண்டு ஒழுங்கமைக்கப் பட்டுள்ளது. தெளிவான, விரிவான தகவல்களை தமது சொந்த மொழிகளில் பெற்று, சமூகத்தில் சம பங்குடன் சுயமாக ஒருங்கிணைந்து வாழ இலகுவாக அமைகின்றது.
உங்கள் அனைவருக்குமான மாப்ஸ்நாட்காட்டி!
சந்தாதாரர்கள் தனிப்பட்டநபர்களும் அதேபோல் வேற்றுமொழி பேசுகின்ற மக்கள் தொடர்புடைய நிறுவனங்களும்: குடியிருப்பாளர் பணியகங்கள், மொழிக் கல்விநிறுவனங்கள், சமூகசேவை நிறுவனங்கள், சனசமூகநிலையங்கள், வெளிநாட்டவர்அமைப்புக்கள், மருத்துவ நிலையங்கள். இவ்மாத நாட்காட்டி இணையத்திலும், செய்திமடலாகவும், அச்சிடப்பட்ட கையேடாகவும் வெளிவருகின்றது. இது இலவசமாக அல்லது ஒப்பந்த சந்தா மூலம் பெற்றுக்கொள்ளக் கூடியது. ஒரு சந்தாவைப் பெற்றுக்கொள்ள 044 415 65 89 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் மின்னஞ்சலுடனும் அல்லது தொடர்புப்பத்திரம் மூலம் விண்ணப்பித்து முறையே இரத்தும் செய்தும் கொள்ளலாம்.
மாப்ஸ் -செயற்பாட்டாளர்கள்.
இந்த மாப்ஸ் திட்டக்குழு ஒரு திட்ட முகாமைத்துவர், ஒரு உதவியாளர், 15-20 வரையிலான தொண்டு மொழி பெயர்ப்பாளர்கள் அதேபோல் 5-7 வரையிலான மாப்ஸ்கையேட்டைசந்தாதாரர்களுக்கு தபால் பெட்டிகளில்விநியோகம் செய்யும் உதவியாளர்களையும் மற்றும் கூரியர்களையும் கொண்டமைந்துள்ளது.
பொதுத் துறைமூலம்ஒருங்கிணைப்பு விளம்பர ஆதரவு.
முதலாவது மாப்ஸ் சூரிச் நாட்காட்டி 2001 கோடைகாலத்தில் வெளிவந்தது. 2006 ஆம் ஆண்டிலிருந்து சூரிச் AOZ இன் நிகழ்ச்சித்திட்ட நாட்காட்டியாக பிரசுரிகப்பட்டுவருகின்றது. இவ் திட்டக்குழு ஒருங்கிணைப்புத் திட்டத்திற்கு பணியாட்களினதும் நிறுவனங்களினதும் ஆதரவை எதிர்பார்க்கின்றது. எங்களுடன் தொடர்புகொள்ளுங்கள்!